சென்னை:தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்குப் பணி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நியமனத் தேர்வு எழுத வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை அண்ணா அறிவாலயம் அருகே ஏராளமான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வு எதற்கு? - ஆசிரியர்கள் போராட்டம் - special exam for TET Qualified teachers
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் நியமனத் தேர்வு நடத்த வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியமனத்தேர்வு எதற்கு?: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நியமனத்தேர்வு எதற்கு எனக்கேள்வி எழுப்பிய அவர்கள், அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பணி வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த நிலையில், ஆட்சிக்கு வந்து 300 நாட்கள் கடந்த போதும், அதை நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டினர். மேலும், நியமனத்தேர்வை ரத்து செய்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க : ஐஐடி மாணவி பாலியல் வழக்கு: இ-மெயில் மூலம் விசாரணை