தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை" - Teacher Selection Board Chair Talk about computer teacher exam

சென்னை: கணினி ஆசிரியர் தேர்வில் எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

கணினி  ஆசிரியர் தேர்வு
கணினி ஆசிரியர் தேர்வு

By

Published : Dec 4, 2019, 9:32 PM IST

Updated : Dec 4, 2019, 10:35 PM IST

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு இணையம் மூலம் ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது சர்வரில் ஏற்பட்ட பிரச்னையால் தேர்வு பாதிக்கப்பட்டது. அதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வினை எழுதியவர்கள் குற்றம்சாட்டினர்.

தேர்வர்கள் ஒவ்வொருவரின் வினாத்தாளும் மாறுபட்டு இருக்கும். அதனால் எந்தவித முறைகேடும் நடைபெற்று இருக்காது எனஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா விளக்கமளித்தார்.

இந்த தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வானவர்கள் உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மேலும் ஒருவர் கைது... தொடரும் சிபிசிஐடி விசாரணை

Last Updated : Dec 4, 2019, 10:35 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details