சென்னை: 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிக்கையை கடந்த மார்ச் 7ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு ஒத்திவைப்பு! - Teacher Eligibility Test
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது
![ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு ஒத்திவைப்பு! Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16274904-thumbnail-3x2-tet.jpg)
Etv Bharat
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில், 'ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு செப்.10 முதல் செப்.15ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது நிர்வாகக் காரணங்களினால் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை செயல்பாடுகளை கர்நாடக மாநில சுகாதாரக்குழு ஆய்வு