தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முக்கிய அறிவிப்பு - வரும் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு

ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை இருவேளைகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

By

Published : Sep 23, 2022, 3:30 PM IST

Updated : Sep 23, 2022, 3:50 PM IST

ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதித்தேர்வு ஏற்கெனவே நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை இருவேளைகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கணினி வழித்தேர்வுக்காக பயிற்சித்தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துப்பணி நாடுநர்களும் இதனைப்பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம், அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எழுதுவதற்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 1 ஆயிரத்து 885 பேரும் என மொத்தமாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:LIC நிறுவனத்தில் அதிகாரியாகும் வாய்ப்பு

Last Updated : Sep 23, 2022, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details