சென்னை:வியாசர்பாடி காமராஜர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் மித்ரன் அஜய்(5). பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெருவில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி மித்ரன் அஜய் பள்ளியிலிருந்தபோது அங்கு பணியாற்றியவரும் ஆசிரியை ஜனனி என்பவர் பிரம்பால் மித்ரன் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டிற்குச்சென்ற மித்ரனின் தலையில் வீங்கிருப்பதைக் கண்ட பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் சிறுவன் கால் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததால் சிறுவனின் பெற்றோர் பள்ளி சென்று விசாரித்தபோது சிறுவன் சேட்டை செய்ததால், ஆசிரியர் அடித்தது தெரியவந்தது.