சென்னை: திருமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மதிவாணன் (40). இவர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவர்களும், பெற்றோர்களும் உள்ள வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச வீடியோ லிங்க்-ஐ அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், கணித ஆசிரியர் மதிவாணனிடம் பள்ளி நிர்வாகம் துறை ரீதியிலான விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ஆபாச வீடியோ லிங்க்-ஐ வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பியது தெரியவந்தது.