உலகத்தையே திக்குமுக்காட வைத்துள்ள கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனைக் கருவியான ’பிசிஆர் Polymerase chain reaction (PCR)’ குறைவாக உள்ளது எனவும், எனவே, அக்கருவிகளை அதிகளவில் வாங்கி பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.