பேரவை தேர்தல் - ஏப்.4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் மூடல் - தமிழ்நாடு அரசு
16:19 March 24
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வரும் ஏப்.4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் 6ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:டாஸ்மாக் கடைகளில் ரசீது, மதுபானத்தின் விலைப்பட்டியல் குறித்து ஆய்வுசெய்ய உத்தரவு