தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுப்பிரியர்கள் தலையில் இடி: அதிரடி உத்தரவு! - மதுக்கடைகள் பார்களை மூட வேண்டும்

நாளை (பிப்ரவரி 22) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால், ஓட்டு எண்ணக்கூடிய மையங்களுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குடிமகன்கள் தலையில் இடி
குடிமகன்கள் தலையில் இடி

By

Published : Feb 21, 2022, 4:59 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில், பிப்ரவரி 17ஆம் தேதிமுதல் பிப்ரவரி 19ஆம் தேதிவரை மூன்று நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்றைய முன் தினம் தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 20) மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மூன்று நாள்களுக்குப் பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், நாளை (பிப்ரவரி 22) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே, ஓட்டு எண்ணக்கூடிய மையங்களுக்கு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே நாளைய தினம் மதுக்கடைகள் மீண்டும் மூடப்படுகின்றன.

இதையும் படிங்க:டாஸ்மாக் கடைகள் திறப்பு: மதுப்பிரியர்கள் உற்சாகம்

ABOUT THE AUTHOR

...view details