தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனியார் மூலம் ஊழியர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து - அறிவிப்பு வெளியிட்டது தமிழ்நாடு மின்வாரியம் - தமிழ்நாட்டின் தற்போதைய செய்திகள்

தனியார் மூலம் மின்வாரிய ஊழியர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து - அரசாணை வெளியிட்டது அரசு
தனியார் மூலம் மின்வாரிய ஊழியர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து - அரசாணை வெளியிட்டது அரசு

By

Published : Dec 21, 2020, 5:30 PM IST

Updated : Dec 21, 2020, 7:51 PM IST

17:18 December 21

தனியார் மூலம் மின்வாரிய ஊழியர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து

சென்னை:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இடத்தில் தனியார் நிறுவனம் மூலம் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமனம் செய்வதற்கான உத்தரவை ரத்து செய்து மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் அறிவித்துள்ளார் .

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் உத்தரவின் பேரில் தலைமைப் பொறியாளர்(பணியாளர்) ரவிச்சந்திரன் கடந்த 16ஆம் தேதி அனைத்து தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை தரமான சேவையாக வழங்க வேண்டி உள்ளது. இதற்கு மின்சாரத்தை அளிக்கும் கடத்திகளைத் தினமும் பராமரிக்க வேண்டியுள்ளது. எனவே பராமரிப்பு பணிக்காக 3 ஆண்டிற்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கவும், தேவைப்பட்டால் கூடுதலாக மேலும் ஒரு ஆண்டிற்குத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை நீடிக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
மேற்பார்வைப் பொறியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவு அலுவலகங்களில் காலியாக உள்ள ஹெல்பர் மற்றும் வயர்மேன் பணியிடங்களில் 20 நபர்களை 3 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தின் மூலம் பணியில் அமர்த்தலாம். இவர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சத்து 88ஆயிரம் ரூபாய் கட்டணமாக அளிக்கப்படும். உதவிப் பொறியாளர் பிரிவில், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் காலியாக இருந்தால், 20 பணியாளர்களைத் தனியார் நிறுவனம் மூலம் நியமனம் அளிப்பதற்கு தனி டெண்டர் விடலாம்.
உதவிப் பொறியாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 25 விழுக்காட்டிற்கும் மேல் காலியாக இருந்தால், 2 பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை இணைத்து 20 பணியாளர்களைத் தனியார் நிறுவனம் மூலம் நியமனம் அளிப்பதற்கு தனியாக டெண்டர் விடலாம்.
 உதவிப்பொறியாளர் பிரிவில் 25 விழுக்காட்டிற்கும் குறைவாக காலிப்பணியிடம் இருந்தால், அங்குள்ள பணியாளர்களை வைத்து பணிபுரிய வேண்டும். இதன்மூலம் ஒரு பணியாளருக்கு தினமும் 412 ரூபாய் கூலியாக வழங்கப்படும். 30 நாட்கள் கொண்ட மாதத்திற்கு 12,360 ரூபாய் வழங்கப்படும். ஆண்டிற்கு 5 விழுக்காடு தினக்கூலி உயர்த்தி வழங்கப்படும். தனியார் நிறுவனத்திற்கு 3 ஆண்டிற்கு ஒரு கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது' என அதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில், 'தமிழ்நாடு மின்சார வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுகிறது' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மின்வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு!

Last Updated : Dec 21, 2020, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details