சென்னை:கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், "மதுரை மண்டலம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.