தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் நாளை டான்செட் தேர்வு - டான்செட் தேர்வு

சென்னை: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட் 2019) நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

Tancet

By

Published : Jun 21, 2019, 5:24 PM IST

டான்செட் நுழைவுத் தேர்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல கல்லூிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2019-20ஆம் கல்வியாண்டில் சேரலாம். மேலும் சில பல்கலைக் கழகங்களிலும் தனியார் கல்லூரிகளிளும் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேரலாம்.

எம்.பி.ஏ, எம்.சிஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு மே 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். எம்.சி.ஏ. படிப்பிற்கு விண்ணப்பம் செய்திருக்கும் 6,002 பேருக்கு நாளை (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு விண்ணப்பத்திருக்கும் 21,733 பேருக்கு நாளை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு விண்ணப்பத்திருக்கும் 14,201 பேருக்கு 23ஆம் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணி முதல் 12 மணிவரையும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்தத் தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் நடக்கவிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details