சென்னை: மக்கள் நல்வாழ்த்துறை இன்று (அக். 9) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 832 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,432 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில், இதுவரை நான்கு கோடியே 69 லட்சத்து 78 ஆயிரத்து 922 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 26 லட்சத்து 72 ஆயிரத்து 843 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறையும் கரோனா
அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 637 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 1,519 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 20 ஆயிரத்து 499 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் நான்கு பேரும், அரசு மருத்துமனையில் 21 பேரும் என 25 நபர்கள் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தி 707 உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 176 நபர்களுக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 149 நபர்களும் அதிக அளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ ஊசிகள் ஏற்றுமதிக்கு மூன்று மாதம் தடை