தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாடு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.4), நாளை மறுநாள் (ஏப்.05) ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 6, ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தேவகோட்டை (சிவகங்கை) 8 செ.மீ, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 6 செ.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) தலா 4செ.மீ, சிவலோகம் (கன்னியாகுமரி), கும்பகோணம் (தஞ்சாவூர்), சிற்றாறு (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ, போடிநாயக்கனூர் (தேனி), சோலையார் (கோவை) தலா 2செ.மீ, கன்னியாகுமரி, விருதுநகர் AWS (விருதுநகர்)) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.