சென்னை:நாளை மறுநாள் (பிப்ரவரி 22) முதல் 24ஆம் தேதி வரை, தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"வளி மண்டல மேலடுக்குச்சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் முதல் 24ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மாவட்ட ரீதியாக மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணராயபுரம் (கரூர்) 3, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஆரணி (திருவண்ணாமலை), மாயனூர் (கரூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), ஆரணி ஏஆர்ஜி (திருவண்ணாமலை) தலா 2, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 1 மழை அளவு பதிவாகியுள்ளது.