தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில்  நான்கு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாட்டில் வானிலை நிலவரம்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

By

Published : Apr 27, 2022, 4:46 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (ஏப்.27) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 30ஆம் தேதி தென் தமிழ்நாடு, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே1ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தொடர் சரிவில் தங்கம் விலை!'

ABOUT THE AUTHOR

...view details