தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

TN Weather News:தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை!

தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை!
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை!

By

Published : May 3, 2022, 3:44 PM IST

சென்னை:தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழ்நாடு, வட உள் தமிழ்நாடு மாவட்டங்கள், காரைக்கால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய (கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை) மாவட்டங்களில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மே 4) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (மே 5) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 6ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய (கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை) மாவட்டங்கள், காரைக்கால், மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மே 7ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் எமெராலட் (நீலகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி) தலா 3 செ.மீ, மேட்டூர் (சேலம்), மாரண்டஹள்ளி (தர்மபுரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 2 செ.மீ, கிருஷ்ணகிரி, எடப்பாடி (சேலம்), பரூர் (கிருஷ்ணகிரி), கேட்டி (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), மேட்டுப்பாளையம் (கோவை), அவலாஞ்சி (நீலகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), நடுவட்டம் (நீலகிரி) தலா 1செ.மீ. என மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ’நாளை (04.05.2022) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக இப்பகுதிகளில் 06-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (மே 4)சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், மே 5ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மே 6ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மே 7ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்’ என அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க:ரம்ஜான் பண்டிகை: கொத்தமல்லி, புதினா, இஞ்சி விலை உயர்வு

ABOUT THE AUTHOR

...view details