தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் தொடர்பாக, தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
”தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள், முஸ்லிம் முன்னாள் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளுக்கு பின்வரும் தேர்தல் கால அட்டவணை 15.07.2020 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல்- 16.07.2020 (வியாழக்கிழமை) முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்- 23.07.2020 (வியாழக்கிழமை) ஆகும்.