தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோழியால் கரோனா பரவாது: ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்! - கரோனா

சென்னை: கோழி மூலம் கரோனா வைரஸ் பரவுவதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

radhakrishnan
radhakrishnan

By

Published : Mar 18, 2020, 2:20 PM IST

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய நாமக்கல் உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், "கரோனா வைரஸ் கோழி மூலம் பரவுவதாக வதந்தி பரவியதையடுத்து, நாமக்கல்லில் முட்டை ஒன்று 1.50 பைசாவுக்கும், கோழி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் மட்டுமே விற்பனைசெய்யப்படுகிறது" என்றார்.

அவற்றை யாரும் வாங்க முன்வராததால் பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கோழி மூலம் கரோனா வைரஸ் பரவுவதில்லை என்ற விழிப்புணர்வு தொடர்ச்சியாக மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுவருவதாகவும், கோழி மூலம் நோய் பரவுவதில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: கரோனாவிற்கு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் விஜய பாஸ்கர்!

ABOUT THE AUTHOR

...view details