தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - Chennai

சென்னை: நடந்துமுடிந்த இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2019 Aug Exam results

By

Published : Sep 27, 2019, 9:43 AM IST

Updated : Sep 27, 2019, 11:51 AM IST

காவல், சிறை, தீயணைப்புத் துறைகளில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு எட்டாயிரத்து 888 பேரை தேர்வு செய்வதற்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், 32 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

மேலும் இத்தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்றுwww.tnusrbonline.orgஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடல் திறன் போட்டிகளுக்கு 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவார்கள்.

அதற்கான கடிதம், விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க

'ஈழப் போராளி திலீபன் பெயரில் தெரு' - மதுரை மக்களின் ஈழப் பாசம்!

Last Updated : Sep 27, 2019, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details