தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விநாயகர் சதுர்த்தி: 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழ்நாடு முழுவதும் 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

special-buses
special-buses

By

Published : Sep 7, 2021, 3:21 PM IST

சென்னை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலாகப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுசெய்துள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழகம், "இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி வார இறுதி நாளில் வருவதால், அந்நாளை தொடர்ந்து இரண்டு நாள்கள் விடுமுறையாகும்.

இதன் காரணமாக, சென்னையிலிருந்து அதிகப்படியான மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிடுவார்கள். அவர்களுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் 1,000 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,250 பேருந்துகளோடு, இந்தச் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

இதற்கு விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை உள்ளிட்ட போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில், இன்று கூடுதலாக 100 பேருந்துகளும், நாளை (செப்டம்பர் 8) 300 பேருந்துகளும், செப்டம்பர் 9ஆம் தேதி 600 பேருந்துகளும், இயக்கப்படும்.

பயணிகளின் தேவையைப் பொறுத்து கூடுதலாகப் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக் கழகம் தயாராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊக்கத்தொகை

ABOUT THE AUTHOR

...view details