தேசியக் கல்வி மற்றும் ஆசிரியர் நிறுவனத்தின் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் பி.இ. (பொறியியல்) படிப்பில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளை படிக்கும் மாணவர்கள் விரும்பினால் பி.எட். படிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருக்கிறது. அதனடிப்படையில் பி.இ., பி.எட். படிக்கக் கூடிய மாணவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி அதன்பின் மற்றொரு தேர்வை எழுதி தேர்வு பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, உயர் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை ஒன்றில், பி.இ. (கணிதம்), பி.எட். படிப்பவர்கள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேரத் தகுதி பெறுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.