தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல், வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறஉள்ளது. இத்தேர்தல் பணிகளுக்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், வெவ்வேறு துறைகளின் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,
ஊராட்சி மற்றும் நகர்ப்புற மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்காக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், தேர்தல் பணிக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த பணியாளர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தேர்தல் அதிகாரிகளாக, மாவட்டந்தோறும் நியமிக்கப்பட உள்ளனர். அவ்வாறு நியமிக்கப்படும் தேர்தல் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகள் - பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு - தேர்தல் பணி
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பணிகளிலிருந்து பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
local body