தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஜுன் மாதத்தில் அட்டவணை வெளியீடு! - கரோனா

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாத இறுதிக்குப் பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan
sengottaiyan

By

Published : May 8, 2020, 7:21 PM IST

கரோனா பரவல் காரணமாக, மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. எனினும், கரோனாவின் தாக்கம் குறையாததால் தேர்வு நடைபெறவில்லை. பின்னர் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படுமென தெரிவித்திருந்தார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவேண்டிய, தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. அதேபோன்று 24 ஆம் தேதி நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத பல்லாயிரம் மாணவர்களுக்கு வேறொரு தேதியில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஜுன் மாதத்தில் அட்டவணை வெளியீடு!

தற்போது வரை கரோனாவின் தாக்கம் குறையாத இச்சூழலில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என பெற்றோர், மாணவர்கள் இடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்குப் பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது ” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இணையவழி கற்பித்தல் சாத்தியமற்றது, சமமற்றது!

ABOUT THE AUTHOR

...view details