தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனியார் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் - பொதுத்தேர்வு

சென்னை: ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மையங்கள் அந்தந்தப் பள்ளியிலேயே அமைக்கப்படும் எனவும், வினாத்தாள்கள் அரசு தேர்வுத்துறையால் அச்சிட்டு வழங்கப்படும் என்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

students
students

By

Published : Jan 22, 2020, 12:19 PM IST

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

  • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்துப் பள்ளி ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் ஐந்து, எட்டாம் வகுப்பு நடத்தும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாகச் செயல்பட வேண்டும்.
  • ஐந்து, எட்டாம் வகுப்புக்குரிய கேள்வித்தாள்கள் பாதுகாப்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
  • கட்டுக்காப்பு மையங்கள் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரின் பொறுப்பில், வினாத்தாள் அந்த மையங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு.
  • தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வுக் கட்டணமாக 100 ரூபாயும், எட்டாம் வகுப்பிற்கு தேர்வுக் கட்டணமாக 200 ரூபாயும் நிர்ணயம்.
  • இவர்களுக்கான கேள்வித்தாள்கள் அரசுத் தேர்வுத் துறையால் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
  • ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு முன்னரும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு முன்னரும் திருத்தி முடிக்கப்பட வேண்டும்.

மேலும், மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியல் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details