தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 575 பேருக்கு கரோனா - தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை
தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 575 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.
![தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 575 பேருக்கு கரோனா Corporation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:06:10:1630776970-tn-che-06-corona-update-script-image-7209208-04092021230417-0409f-1630776857-201.jpeg)
சென்னை: சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 694 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆயிரத்து 575 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே 20 லட்சத்து 60 ஆயிரத்து 210 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 21 ஆயிரத்து 086 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 315 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 610 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 69 ஆயிரத்து 771 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் மூன்று நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 17 நோயாளிகளும் என 20 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கோயம்புத்தூரில் புதிதாக 230 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் 167 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.