சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உள்தமிழ்நாடு பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்றும் (மார்ச் 27), நாளையும் (மார்ச் 28) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்:கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மார்ச் 30, 31ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தேக்கடி (தேனி), ராசிபுரம் (நாமக்கல்) தலா 3 செ.மீட்டர், சோலையார் (கோயம்புத்தூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), சந்தியூர் கேவிகே (சேலம்) தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.