சென்னை:தென் தமிழ்நாட்டிலிருந்து ராயலசீமா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும்(ஜன.25), நாளையும்(ஜன.26) தென்தமிழ்நாடு, வட கடலோர தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
27.01.2022:தென்தமிழ்நாடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.