தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 10, 2022, 2:34 PM IST

ETV Bharat / city

RAIN UPDATE: தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்

RAIN UPDATE: தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சென்னை:RAIN UPDATE: தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை(ஜன.11) டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை மறுநாள் (ஜன.12) கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வருகின்ற 13ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வருகின்ற 14ஆம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

10.01.2022 முதல் 11.01.2022:தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் (5.8 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி!

ABOUT THE AUTHOR

...view details