தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும், அடுத்த நான்கு நாட்களுக்கு மாநிலத்தில் மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை, tamilnadu rain update, chennai rain, tamilnadu weather update, தமிழ்நாடு வானிலை அறிக்கை, மழை விவரம்
tamilnadu rain update

By

Published : Jan 7, 2021, 12:45 PM IST

Updated : Jan 7, 2021, 2:35 PM IST

சென்னை: வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்து குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் - புவியரசன்

மேலும், நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் , ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Jan 7, 2021, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details