தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டெர்லைட் நிறுவனம் நாடகமாடுகிறது - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - tamilnadu pollution coontrol board

சென்னை: தூத்துக்குடியில் சரி செய்ய முடியாத பாதிப்பை உருவாக்கி விட்டு, மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியைப் பாடுவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

By

Published : Jul 24, 2019, 7:40 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் இன்று 10ஆவது நாளாக விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், முன்னெச்சரிக்கை கொள்கை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடப்பட்டதாகவும், மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

நிலத்தடி நீர், காற்று மாசுவை ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியது எனவும், அவ்வாறு ஏற்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஆலைக்குத் தான் உள்ளது எனவும் வாதிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலை

மேலும் வாதிட்ட அவர், ” கடுமையான நிபந்தனைகள் விதித்த போதும், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்ந்தால் ஆலையை மூட நீதிமன்றமே உத்தரவிடலாம். கடந்த 1996ஆம் ஆண்டு முதல் ஆலை பல்வேறு மாசுவை ஏற்படுத்தியுள்ளது என்பது ஆய்வு அறிக்கைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆலை விரிவாக்கத்துக்குப் பின் நிலைமை மிகவும் மோசமடைந்து ஆலையை இயக்க அனுமதிக்கக் கூடிய நிலையிலும் இல்லை.

1996 அக்டோபரில் ஆலையை இயக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆலைக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்த வழக்கில், கழிவுகள் முறையாக, நவீன தொழில் நுட்பம் கொண்டு பராமரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஸ்டெர்லைட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி அமைப்பு 1998 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் அறிக்கைகளை அளித்தது. அதன் அடிப்படையிலேயே ஆலையை மூட 2010ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாசு ஏற்படுத்துவதை உறுதி செய்து, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இருந்தாலும், மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியைத் தொடர்ந்து பாடுகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி நகரம் சரி செய்ய முடியாத பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஆலை கழிவுக் குட்டையில் வேதிப் பொருட்களின் அளவு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்ததை விட அதிகமாக இருந்ததை ஆய்வறிக்கைகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் விதிகளைப் பின்பற்றாததால் ஆலை மூடப்பட்ட போதும், சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, நீதிமன்றம் மூலம் ஆலையை இயக்க அனுமதி பெற்றுவிடுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details