தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கோடையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்திவருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 39.49 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.
3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 52.02 விழுக்காடு வாக்குப்பதிவு - தமிழ்நாடு தேர்தல்
சென்னை: பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 52.02 விழுக்காடு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் பதிவு ஆகியிருப்பதாக தலைமைத் தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.
election
இந்நிலையில், மாலை மூன்று மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் 52.02 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் மூன்று மணி நிலவரப்படி 55.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Last Updated : Apr 18, 2019, 7:59 PM IST