உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 62ஆவது அகில இந்திய காவல் பணி திறனாய்வு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநில காவல் துறை சார்பில் வீரர்கள் பங்குபெற்றனர்.
அகில இந்திய அளவில் தமிழ்நாடு காவல் துறை முதலிடம்! - காவல் பணி திறனாய்வு போட்டி
சென்னை:காவல் பணி திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
EDAPADI PALANISAMY
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காவல் துறை அணி நான்கு தங்கம், ஐந்து வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியிலில் முதலிடம் பெற்றது.
வெற்றிபெற்று தமிழ்நாடு திரும்பிய காவல் துறை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் 2019ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டம் போளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுராதா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்