சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு பதிலளித்த கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், ‘தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள் பெருகிவிட்டன. அங்குள்ள கடைகளில், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விற்பனை செய்து வருகிறார்கள். இருப்பினும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில், ’கோ ஆப்டெக்ஸ்’ கடைகளையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
‘ஷாப்பிங் மால்களுக்கு இணையாக கோ ஆப்டெக்ஸ்!’ - ஓ.எஸ். மணியன் - கோ ஆப்டெக்ஸ்
சென்னை: தமிழ்நாட்டில் ஷாப்பிங் மால் கடைகளுக்கு இணையாக கோ ஆப்டெக்ஸ் கடைகள் தரம் உயர்த்தப்படுமென கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
co optex
தற்போது, தமிழகத்தில் 108 விற்பனை நிலையங்களும், மற்ற மாநிலங்களில் 49 விற்பனை நிலையங்களும் உள்ளன. பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும் ஓரளவு லாபத்தில் இயங்கி வருகிறது. எனவே, தனியார் கடைகளுக்கு இணையாக அனைத்துக் கிளைகளையும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆருக்கும் பிரபாகரனுக்குமிடையே காவிய நட்பு - பழ. நெடுமாறன் நெகிழ்ச்சி