சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ” அனைவரிடமும் கலந்து ஆலோசித்து மாநிலங்களவைக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். மேலும், பத்திரிகையாளர் பாதுகாப்பிற்கு வாரியம் அமைத்து, பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது “ என்றார்.
திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணி பற்றி கமல் ஹாசன் முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ, மூன்று, நான்கு அணிகள் இல்லை, எத்தனை அணிகள் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். ரஜினி-கமல் கூட்டணி என்பது, பெண் பார்க்காமல் கல்யாணம் ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமமாகும் எனக் கூறினார்.