தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திக போல் திமுக மாறிவிடும் - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: தேர்தலைக் கண்டு திமுக இப்படியே பயப்படுமானால் 2021 தேர்தலில் திராவிடர் கழகம் போல் திமுக மாறிவிடுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Dec 16, 2019, 3:47 PM IST

ராயபுரத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள எட்டு மண்டலத்திற்கு உட்பட்ட ஆயிரத்து 935 பேருக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் அமைச்சரின் சார்பில் புடவையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, மாநகராட்சி துணை ஆணையர் மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

” வறுமையில் வாடும் பெண்களுக்காக தாலிக்குத் தங்கம் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 8 கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாயும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

கராத்தே தியாகராஜனும், தமிழருவி மணியனும் வரிந்துக் கட்டிக்கொண்டு ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஆனால், ரஜினிகாந்த் 2021 இல் கூட கட்சி ஆரம்பிப்பது சந்தேகமாகத்தான் உள்ளது.

தமிழகத்தில் அதிமுகவை மீறிய சக்தி எதுவும் இல்லை. திமுக கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படுகிறது. அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் கட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவரைத்தான் கட்சியின் தலைவராக அக்கட்சித் தொண்டர்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்தான் உண்மையான தலைவராக முடியும். திமுகவிற்கு தேர்தல் என்பதே பிடிக்காத வார்த்தையாகிவிட்டது . இதே நிலைமை நீடித்தால் 2021இல் திராவிடர் கழகம் போல் திமுக மாறிவிடும். மீனவர் மீதான தாக்குதல், காவிரி நீர், கச்சத்தீவு போன்ற பிரச்சனைகளில் மத்திய அரசிடம் திமுக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பிரச்னையில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருகிறோம் “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: ' ஸ்டாலின் காந்தியும் இல்லை; நான் புத்தனும் இல்லை ' - எகிறிய அமைச்சர் சி.வி. சண்முகம்

ABOUT THE AUTHOR

...view details