தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி விவகாரம்... ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர்

சென்னை: டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஸ்டாலின் என் மீது குற்றச்சாட்டு கூறினால் வழக்குத் தொடரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Feb 8, 2020, 7:00 PM IST

தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் செனாய் நகர் அம்மா அரங்கில் நடந்தது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ தமிழ்நாட்டில் மட்டுமே 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தூங்கி எழுந்து, மீண்டும் தூங்கும் வரை, இந்த அரசு பதவி விலக வேண்டும் எனவும் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இதே திமுக ஆட்சியாக இருந்தால் டிஎன்பிஎஸ்சி முறைகேடு மறைக்கப்பட்டிருக்கும். ஆனால், நாங்கள் தற்போதுவரை 34 பேரை கைது செய்திருக்கிறோம்.

முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அலுவலர்கள் யார் என்பதை ஸ்டாலின் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு மக்களை திசைத் திருப்ப உள்நோக்கத்தோடு ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார். முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால் ஸ்டாலின் சிபிசிஐடியிடம் சொல்ல வேண்டும். தகவல் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் யாராக இருந்தாலும் சம்மன் அனுப்பி உண்மை வரவழைக்கப்படும்.

தயாநிதி மாறன் நேரடியாக என் மீது குற்றஞ்சாட்டியதால் அவர் மீது வழக்குத் தொடர்ந்தோம். ஸ்டாலின் என் மீது குற்றச்சாட்டு கூறினாலும் வழக்குத் தொடரப்படும். தேர்வுகளில் தவறுகள் நடக்கும் வாய்ப்புகள் அடைக்கப்பட்டு வருங்காலத்தில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்படும் என்றார்.

’டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் என்னை தொடர்புபடுத்தி முடிந்தால் பேசுங்கள்'

அவரைத் தொடர்ந்து மின்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், “ பூரண மதுவிலக்குதான் அரசின் கொள்கை. படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படுகின்றன. மதுபானங்களை பிளாக்கில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் வாரியத் தேர்வில் தவறு நடக்க வாய்ப்பில்லை. ஒளிவு மறைவின்றி தேர்வுகள் நடைபெறுகின்றன. கேங்மேன் தேர்வில் 90 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். தேர்வுகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் வீடியோ பதிவை கொடுக்கவும் தயாராக உள்ளோம் “ என்றார்.

மின் வாரியத் தேர்வில் தவறு நடக்க வாய்ப்பில்லை

இதையும் படிங்க: டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டிற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details