கரோனா தொற்று பரவ காரணமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையுடன் கட்டுப்பாடுகள் முடிய உள்ள நிலையில் மே மாதத்திற்கான கட்டுப்பாடுகளுடனான தளர்வுகளை தமிழ்நாடு அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது. அதன்படி,
மறு உத்தரவு வரும் வரை அனுமதி கிடையாது
- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
- இரவு நேரத்தில் முழு ஊரடங்கு (இரவு 10 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை)
- மே 2 வாக்கு எண்ணிக்கை போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- 3000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய கடைகளுக்கு தடை
- கொடைக்கானல், ஊட்டி, மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தளங்களை பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் (Recreation Clubs), அனைத்து மதுக்கூடங்கள் (All Bars), பெரிய அரங்குகள் (Auditoriums), கூட்ட அரங்குகள் (Meeting Halls) போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.
- பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்கள் ( Shopping Complex & Malls ) இயங்க அனுமதி இல்லை.
- மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது
- வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.
- தனியாக செயல்படுகின்ற மளிகை உள்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் (Departmental stores) குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.