தமிழ்நாடு, கேரளா இடையே நீர்ப் பங்கீடு சிக்கல்கள் பலகாலமாக இருந்து வருகிறது. எனவே, இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நீர்வளத்துறை அதிகாரிகள் அடங்கியக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் இன்று தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
தமிழ்நாடு - கேரளா இடையே நடந்த பேச்சுவார்த்தை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழ்நாடு குழுவுக்குப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன்,
' பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தத்தை இருமாநில மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுமுகமாக இந்தக் கூட்டம் நடந்தது. பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து விவாதித்தோம். கேரளாவிற்கு வழங்க வேண்டிய நீரைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். வறட்சி காலங்களில் பற்றாக்குறை ஏற்படும் போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. பரம்பிக்குளம் - ஆழியாறு விவகாரத்தில் மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் எண்ணம். அடுத்தக் கூட்டத்தை வரும் ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாதத் தொடக்கத்திலோ கேரளாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
மணிவாசன், பொதுப்பணித்துறைச் செயலாளர் முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதுகுறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: முதலமைச்சரைச் சந்திக்க விவசாயிகள் சென்னை பயணம்