தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நாட்டிய நாடகங்கள் மேடையேற்றம் செய்ய வழங்கப்படும் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்' - tamilnadu iyal isai naadakam

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழில் புதிய நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய வழங்கப்படும் நிதி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

iyal isai nadakam

By

Published : Nov 14, 2019, 7:00 PM IST

இது குறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் நல்கை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், புதிய நாட்டிய - நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள், கலைக்குழுக்கள், கலை நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் பெறவும் நிபந்தனைகள் பற்றி தெரிந்துகொள்ள, உறுப்பினர்-செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு டிசம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details