தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஏப்ரல் 15) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கரோனா குறித்த முதன்மைத் தகவல்களை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக 38 பேருக்கு கரோனா; எண்ணிக்கை 1242ஆக உயர்வு! - விஜயபாஸ்கர் பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
vijayabaskar press meet
அதில்
- இன்றைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38
- இதில் 34 பேர் ஒரே இடத்திற்குச் சென்று வந்தவர்கள், மூன்று பேர் வேறு நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஒருவர் மருத்துவர்
- இன்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 118ஆக உள்ளது.
- இன்று மட்டும் இருவர் உயிரிழப்பு, ஒருவருக்கு 47 வயது; மற்றொருவருக்கு 59 வயது. மொத்த உயிரிழப்பு 14ஆக உயர்வு
மேலும், இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 994. இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 835 என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.