கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் 26 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கிய மருத்துவமனைகளான மியாட், அப்போலோ, காவேரி, பில்ரோத் ஆகியவற்றில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட அனைத்துப் படுக்கைகளும் நிரம்பியுள்ளன.
ஆனால், கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் இதுவரை ஒரு நோயாளிகூட சேராமல் உள்ளனர்.