சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற பின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ” மணிமகுடம் வைத்தது போல் வரலாற்றுச் சாதனையாக ஏழை எளிய மக்கள்கூட சிகிச்சை பெறக்கூடிய வகையில், புற்றுநோயியல் வளாகம் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் உள்ளது போன்ற முப்பரிமாண சிகிச்சை இங்கு அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் முதன்முறையாக உயர் தொழில்நுட்பம் மிக்க கருவி, 7 கோடி ரூபாய் செலவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புற்று நோய் சிகிச்சையை எந்தவித கட்டணமும் இல்லாமல் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம். புற்று நோய் பாதித்த செல்களை மட்டும் கண்டறிந்து சிகிச்சையளிக்கும்படியான முறைகள் இங்கு உள்ளன. 10 மருத்துவமனைகளில் இந்த கருவி அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும்.
மருத்துவத்தைப் பொதுப்பட்டியலில் மாற்றுவது குறித்து, மத்திய அரசு கருத்து கேட்கும்போது தமிழ்நாட்டின் கருத்தை அழுத்தமாக வைப்போம். கரோனா வைரஸ் குறித்து கண்காணிக்க திருச்சி, சென்னை, மதுரை ஆகிய விமான நிலையங்களில் screening சென்டர் வைத்து கண்காணித்துவருகிறோம். 3 பேர் கொண்ட மத்தியக் குழு நேற்று வந்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். துறை செயலர் தினமும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக அனைத்து மருத்துவமனைகளிலும் கண்காணித்து வருகிறார். இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்துவருகிறது.
கொரோனா வைரஸ் - விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு 16 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலியோ தாக்கம் இல்லாததால், இரண்டு தவணைகளாக கொடுக்க வேண்டிய சொட்டு மருந்தை, உலக பொது சுகாதார நிறுவனம் ஒரு தவணையாக மாற்றியுள்ளது” என்றார். இச்சந்திப்பின்போது சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உடனிருந்தார்.
இதையும் படிங்க: 'சீனாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்' - தமிழ்நாடு அரசுக்கு சீன தூதரகம் கடிதம்