தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 34ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்கரான் பாதிப்பு  தமிழ்நாட்டின் மருத்துவ அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி  தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விபரங்கள்  Tamilnadu health minister Press interview  Omicron stage in Tamilnadu  Tamilnadu Omicron case increased 34
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விபரங்கள்

By

Published : Dec 23, 2021, 1:10 PM IST

சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் விவரங்களின் அடிப்படையில் மக்கள் தொகையுன் சுகாதாரத்தையும் இணைத்துச் செயல்பட வேண்டியுள்ளது.

தேசிய நல்வாழ்வு குழுமத்துடன் தனியார் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள ஆறு கோடியே 57 லட்சம் குடும்ப அட்டைகளின் உறுப்பினர்களின் சுகாதாரம் சார்ந்த விவரங்கள் இணையத்தில் பதிவுசெய்யப்பட இருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் ஒவ்வாெருவரின் உடல்நலம் குறித்து விவரங்கள் பதிவுசெய்யப்படும். கண்டமங்கலத்தில் பணியாற்றி அமைப்புகள் 12 ஆயிரம் தெர்மல் ஸ்கேன் தந்துள்ளனர். இதன்மூலம் சுகாதாரப் பணியாளர்கள் கணகாணிப்புப் பணிகள் மேற்கொள்ள பயன்படும் என்பதற்காக அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விவரங்கள்

பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வந்த வெளிநாட்டுப் பயணிகளில் ஒரு லட்சத்து 950 நபர்களில் இரண்டு விழுக்காட்டினர் என்ற அடிப்படையில் இரண்டாயிரத்து 870 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

அதிகம் பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வந்தவர்களில் 100 விழுக்காடு பரிசோதனை என்ற வகையில் 15 ஆயிரம் 259 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்த 18 ஆயிரத்து 129 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 114 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அவர்களின் மாதிரிகள் மரபியல் மாற்றம் ஆய்வகத்தில் மறு ஆய்வு உட்படுத்தப்பட்டதில் மரபியல் மாற்றம் எஸ் ஜின் டிராப் 57 பேர் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 114 மாதிரிகளையும் மத்திய அரசிற்கும் அனுப்பிவைத்துள்ளோம். இதில் ஒமைக்ரான் என்று புனேவிலிருந்து வந்த தகவலில் ஏற்கனவே ஒருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு 60 பேரின் மாதிரிகள் அனுப்பியுள்ளனர். அவர்களில் 30 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், ஏற்கனவே பாதிப்பிற்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்த மூவர் என 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்கரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுபவர்கள் விவரம்

மரபணு மாற்றம் எஸ் ஜீன் டிராப் 57 பேருக்கு இருந்தது. அதில் 33 பேர் என உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்கள் மருத்துவக் கண்காணிப்பிலிருந்து வருகின்றனர். எல்லோரும் மிகவும் நன்றாக இருக்கின்றனர். 10 முதல் 12 நாள்கள் முடிந்தவர்கள் எட்டு பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு முதல்நிலை பாதிப்பு மட்டும் தான். தலைச்சுற்றல், தொண்டை வலி போன்ற சிறிய பாதிப்புதான் இருக்கிறது.

மேலும் 23 பேருக்குப் பரிசாேதனை முடிவு தெரிய வேண்டியுள்ளது. 4775 தொடர்புடையவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 34 என மத்திய அரசு உறுதிசெய்துள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர். விமானங்களிலிருந்து வருபவர்களைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.

சென்னை நாகர்கோவில், திருச்சி, சேலம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருக்கின்றனர். 16 வயது குழந்தை, ஒரு குழந்தை தவிர மற்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் கராேனா பாதிப்பு கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். கோவிட் சார்ந்து பழக்கங்களை அதிகரிக்கவும் கூறியுள்ளோம். பதற்றப்பட வேண்டியது இல்லை என்றாலும், வேகமாகப் பரவும் தன்மை இருப்பதால் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. சென்னை 26 சேலம் 1, மதுரை 4, திருவண்ணாமலையில் 2 என அரசு மருத்துவமனையில் 79 பேர், தனியார் 12 பேர் உள்ளனர். 23 பேர் வீட்டிற்கு சென்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:CM LIVE மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details