தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆவின் பால் விலைக் குறைப்பு பட்டியல் வெளியீடு: மே 16 முதல் அமல் - CM Mk stalin decreased aavin milk price

சென்னை: முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க ஆவின் பால் விலை குறைக்கப்பட்டு புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு
ஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு

By

Published : May 9, 2021, 7:53 AM IST

தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்றதும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க ஆவின் பால் விலை குறைக்கப்பட்டு புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொதுமக்கள் ஆவின் பார்லர்கள், சில்லறை விற்பனைக் கடைகளில் நேரடியாக மே 16 முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து பெற்றுக்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில், சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை 43 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details