சென்னை:Tamilnadu Gold loan discount:நகை கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடு மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது, இதற்கு ஆகும் செலவினங்களை தமிழ்நாடு அரசு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகுதி வாய்ந்த நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான விரிவான வழிகாட்டு முறைகளுடன் உரிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி,
1) ஏற்கனவே 2021ம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் இடம்பெற்று உள்ள அவர்தம் குடும்பத்தினர்.
2) நகைக்கடன் முழுமையாக செலுத்தியவர்கள்
3) 40 கிராம் மேற்பட்டு நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர்
4) 40 கிராம் மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர்
5) கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நபர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்
6) கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள்