தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அடுத்தடுத்து அரங்கேறும் பணியிடை மாற்றம்... தற்போது 9 மாவட்ட வருவாய் அலுவலர்கள்... - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: முதலமைச்சர், துணை முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் உள்பட மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஒன்பது பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

By

Published : May 27, 2021, 4:03 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக (மருந்து) பொது மேலாளர் மீனா பிரியா தர்ஷினி சென்னை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் துணை தலைமை செயல் அலுவலராகவும், சென்னை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன (பைபர்நெட்) பொது மேலாளர் அழகு மீனா சென்னை தேசிய சுகாதார இயக்கக மாநில நகர்ப்புற சுகாதார மேலாளராகவும், தேசிய சுகாதார இயக்ககத்தின் மாநில நகர்ப்புற சுகாதார மேலாளர் பர்கத் பேகம் சென்னை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன (பைபர்நெட்) பொது மேலாளராகவும், சென்னை முதலமைச்சர் அலுவலக துணை செயலாளர் மோகன சந்திரன் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட மாவட்ட வருவாய் அலுவலராகவும்,

பெயர் முன்பு வகித்த பணி தற்போதைய பணி நியமனம்
மீனா பிரியா தர்ஷினி

பொது மேலாளர்,

தமிழ்நாடு மருத்துவ

பணிகள் கழகம், சென்னை.

துணை தலைமை செயல்

அலுவலர், தமிழ்நாடு ஊரக

புத்தாக்க திட்டம், சென்னை.

அழகு மீனா

பொது மேலாளர், தமிழ்நாடு

கண்ணாடி இழை வலையமைப்பு

நிறுவனம், சென்னை.

மாநில நகர்ப்புற சுகாதார

மேலாளர், தேசிய சுகாதார

இயக்ககம், சென்னை.

மோகன சந்திரன்

துணை செயலாளர்,

தமிழ்நாடு முதலமைச்சர்

அலுவலகம், சென்னை.

மாவட்ட வருவாய் அலுவலர்,

தமிழ்நாடு சுகாதார

அமைப்புகள் திட்டம்.

விஜயலட்சுமி

மாவட்ட வருவாய் அலுவலர்,

தமிழ்நாடு சுகாதார

அமைப்புகள் திட்டம்.

திட்ட மேலாளர்,

தொழில்நுட்ப கல்வி

இயக்குநரகம், சென்னை.

அனந்தகுமார்

நிர்வாக பொது மேலாளர்,

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி

கார்ப்பரேஷன் நிறுவனம்.

பொது மேலாளர்,

தமிழ்நாடு அரசு கேபிள்டிவி

கார்ப்பரேஷன் நிறுவனம்.

சவுரிராஜன்

துணை செயலாளர்,

துணை முதலமைச்சர்

அலுவலகம், சென்னை.

இணை தலைமை செயல்

அலுவலர், தமிழ்நாடு ஊரக

புத்தாக்க திட்டம்.

சாந்தாகுமார்

இணை தலைமை செயல்

அலுவலர், தமிழ்நாடு ஊரக

புத்தாக்க திட்டம்.

மாவட்ட வருவாய் அலுவலர்,

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை.

மணி மேகலை

மாவட்ட வருவாய் அலுவலர்,

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை.

கூடுதல் இயக்குநர், சென்னை

மருத்துவ கல்வி இயக்ககம்.

பர்கத் பேகம்

மாநில நகர்ப்புற சுகாதார

மேலாளர், தேசிய சுகாதார

இயக்ககம், சென்னை.

பொது மேலாளர், தமிழ்நாடு

கண்ணாடி இழை வலையமைப்பு

நிறுவனம், சென்னை.

தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் விஜயலட்சுமி சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குநரக திட்ட மேலாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக பொது மேலாளர் அனந்தகுமார் தமிழ்நாடு அரசு கேபிள்டிவி கார்ப்பரேஷன் நிறுவன பொது மேலாளராகவும், துணை முதலமைச்சர் அலுவலகத்தின் துணை செயலாளர் சவுரிராஜன் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் இணை தலைமை செயல் அலுவலராகவும், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் இணை தலைமை செயல் அலுவலர் சாந்தாகுமார் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மாவட்ட வருவாய் அலுவலராகவும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை சென்னை மருத்துவ கல்வி இயக்கக கூடுதல் இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details