12 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு - தமிழ்நாடு அரசு உத்தரவு

tamilnadu govt offered new postings for 12 ips officers
12:47 May 29
சென்னை: தமிழ்நாடு அரசு, 12 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு இன்று (மே 29) 12 ஐபிஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,
- காவல்துறை கணினி மயமாக்கல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காவல்துறை ஏடிஜிபியாக(செயலாக்கம்) இருந்த ஏ.கே. விஸ்வநாதன், காவலர் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்
- குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
- தீயணைப்புத் துறை டிஜிபியாக கரண் சின்கா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
- சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்
- காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்
இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவில் இடம்பெற்றுள்ள 12 அலுவலர்களில், 3 பேருக்கு பதவி உயர்வும், 9 பேருக்கு பணியிடமாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது.
Last Updated : May 29, 2021, 1:53 PM IST