கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத சம்பளத்தை அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மனித உயிர்களைப் பாதுகாத்து வருகிறது.
முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் - தமிழ்நாடு ஆளுநர் ஒரு மாத சம்பளம் அளிப்பு
சென்னை: தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
tamilnadu governor banwarilal purohit paid an one month salary to the Chief Minister's Relief Fund
மக்களின் துன்பங்களைத் தணிப்பதற்கும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.