தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓணம் பண்டிகைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து! - ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகையின் மகிழ்ச்சியான, புனிதமான நேரத்தில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமுள்ள மலையாள சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

By

Published : Aug 30, 2020, 12:31 PM IST

சென்னை:ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’ஓணம் பண்டிகையின் மகிழ்ச்சியான, புனிதமான நேரத்தில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமுள்ள மலையாள சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓணத்தின் இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், நம் நாட்டின் முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றுக்கு அன்பு, இரக்கம், உழைப்பு ஆகிய மூன்றையும் ஊக்குவிக்க நம்மை அர்ப்பணிக்க தீர்மானிப்போம். இந்தத் திருவிழா நம் வாழ்வில் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல் ஆரோக்கியத்தை வழங்கட்டும்' என அதில் கூறியுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details